ஸ்டெம் செல்

            
             உலகில் உள்ள உயிர்களின் ஆதார செல் இது. மனித உடலிலுள்ள சுமார் 1 லட்சம் கோடி செல்களுக்கான அடிப்படை செல், அது தான்  ஸ்டெம் செல்கள், இது ஓர் உயிர் தோன்றக் காரணமானது. இரு செல் உயிரின் சிசுவினுள்ளே இருப்பவை. உடலின் பிற செல்க்களுக்கு இல்லாத சிறப்பு ஸ்டெம் செல்களுக்கு மட்டுமே உண்டு. இது தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, வேறொரு பண்புடைய மற்றொரு செல்லை உருவாக்கிக்கொள்ளும், மேலும் உடலில் உள்ள எல்லா வகையான அனுக்களாகவும் மாற்றிக்கொள்ள கூடியது.
 
             மனிதனின் விந்தனுவிலும் கருமுட்டையிலும் இருப்பது தான் முதலில் ஸ்டெம் செல், அவை கரு உருவாவதற்கு பயன்படுகிறது, இரண்டும் இணைத்த பிறகு 4, 5 தினங்களில் உருவாவது தான் embryonic ஸ்டெம் செல், இதில் மனிதனின் முழு செல்களையும் உருவாக்க கூடிய ஸ்டெம் செல்லாக இருக்கும், முடிவில்லாத உடம்பில் உள்ள எந்த வகை செல்லாகவும் மாறும் அமைப்பு கொண்டது. பிறகு குழந்தை பிறந்த பின் தொப்புள் கொடியில் இருப்பது தான் adult ஸ்டெம் செல், மனிதனின் முழு உடலையும் உருவாக்க கூடிய செல்கள் இல்லையெனிலும் அதிகப்படியான உறுப்புகளை உருவாக்க கூடிய செல்லாக மாறும் சக்தி பெற்றது. 
 
             வளர்ந்த மனிதனின் முதுகு தண்டில் அதிகப்படியான செல்களை உருவாக்க கூடிய ஆற்றல் படைத்ததாக ஸ்டெம் செல் உள்ளது. இது மட்டுமல்லாமல் உடம்பில் பல பாகங்களில் இந்த ஸ்டெம் செல் இருக்கும்.

             சாதாரண செல் என்பது மற்றொரு செல்லை உருவாக்காது, ஆனால் ஸ்டெம் செல்கள் மற்றொரு செல்களை உருவாக்க கூடியது.  அதுமட்டுமில்லை, உடலின் எந்த ஒரு செல்லுக்கு, தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, உடலின் 210 வித்தியாசமான செல்களாக தேவையான தருணத்தில், தன்னை உருமாற்றிக்கொள்ளும் திறன் இருக்கிறதோ அந்த செல்லையே ஸ்டெம் செல் என்கிறது அறிவியல்.
 கருக்கள் மூலமாகவும், ஆட்டோலொகஸ், தொப்புள் கொடி மூலமாக பெறபடுகிறது.

            பொதுவாக ஸ்டெம் செல்கள், சிசு ஸ்டெம் செல்கள், இது சிசுக்களிலும்; திசு ஸ்டெம் செல்கள், உடலின் சில வகையான திசுக்களிலும் இருப்பவை என இரு பிரிவு உண்டு. மேலும், இது மட்டும் இல்லாமல் செயற்கை ஸ்டெம் செல்களும் உண்டு. அவை, தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள். நமது உடலில் உள்ள தோல், ரோமம் இவற்றின் அணுக்களை மரபணுவியல் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்டெம் செல்லாக மாற்றும் நிகழ்வே தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள் எனப்படும். 
 
            இந்த தூண்டப்படும் செல்கள் மனித உடலில் ஏற்படும் அனைத்து நோயில் இருந்தும் மனித உயிரை பாதுகாத்து, மருத்துவ உலகில் தற்போது பெரிதளவு பயன்பட்டு வருகிறது.

            ஸ்டெம் செல்கள் ஆய்வு வெறும் ஆய்வாக மட்டுமே இல்லாமல், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு சில உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து மனித இனத்தை காக்கும் வல்லமை படைத்தது என்பதை 1975 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவச் சிகிச்சையில் நிரூபித்தார்கள்.  
  
            அதன் வகையில், 1960களில் உடலில் ஏற்படும் எல்லாவகையான புற்று நோய்களுமே, சிகிச்சைக்குப்பிறகும் மீண்டும் வளர்ந்துவிடும் தன்மையுடவையாகவும், இதற்கான அடிப்படைக் காரணங்கள் அதுவரை மருத்துவர்களால் சரிவர கண்டுபிடிக்க முடியததாகவும் இருந்தது. ஆனால் அதன்பின் நடத்தப்பட்ட புற்றுநோய் ஆய்வில், சில புற்று நோய்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட வகை அனுக்கள், ஸ்டெம் செல்களின் பிரத்தியேக குணங்களான, தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் மற்றும் புற்றுநோயின் எல்லா வகையான செல்களையும் உருவாக்கும் தன்மையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.புற்றுநோயிலுள்ள இவ்வகை அனுக்கள், திசு ஸ்டெம் செல்களிலிருந்து, மரபனுசேதங்களால் பாதிப்படைந்து, புற்று நோய் அனுக்களாக மாறியிருக்கக்வேண்டும் என்பதை அறிந்து, இவ்வகை அனுக்களை புற்றுநோய் ஸ்டெம் செல்கள் என்றது புற்றுநோய் ஆய்வு உலகம். 

            மின்னசோட்டா பல்கலைக்கழக மருத்துவர் ஜான் கெர்சீதான், வேறு ஒருவரின் எலும்பு மஞ்சையை ஒரு நோயாளிக்கு செலுத்துகிறோம் என்றால், ஒரு புதுநோய் எதிர்ப்பு சக்தியைகொடுக்கிறோம் என்று அர்த்தம். எலும்பு மஞ்சையால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, நோயாளியின் புற்றுநோயை எதிர்த்து போராடி அழிக்கும் திறன் கொண்டதுஎன்கிறார். 

            அக்டோபர் 7, 1975-ல், ரத்தப்புற்றுநோயாளி ஸ்டாலின் என்பவருக்கு உலகின் முதல் எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சையை, அவர் சகோதரரின் எலும்பு மஜ்ஜையையும்கதிர்வீச்சு  மற்றும் மருந்து சிகிச்சையையும், சேர்த்து வெற்றிகரமாக செய்து முடித்ததே முதல் ஸ்டெம் செல் சிகிச்சை.இன்றும் எலும்பு மஞ்சை மாற்றும் சிகிச்சைதான் ரத்தப்புற்றுநோய்க்கு, நம்பிக்கையான, உயிர்காக்கும் ஒரு சிகிச்சையாக நிலைபெற்றுவிட்டது.

            ஸ்டெம் செல்கள் மருத்துவத்துறைக்கு கிடைத்துள்ள ஒரு `அட்சயப் பாத்திரம்அல்லது `அமுதசுரபிஎன்றே சொல்லலாம்.
ஏனென்றால் மருத்துவத்துறை இதுநாள் வரையில் சந்தித்து வரும் எண்ணற்ற சவால்களை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டே வருகின்றது இந்த ஸ்டெம் செல் தொழில் நுட்பங்கள். 

            அதன் வகையில், பால் பற்கள், ஞானப்பற்கள் இவற்றை பிடுங்க நேரும்போது அவற்றிலிருந்து ஸ்டெம் செல்களை உருவாக்கும் முயற்சிகள் பல்லாண்டுகளாக நடைபெற்றுவந்தன. ஆனால் அண்மையில் ஜப்பானிய ஆய்வாளர்கள் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர். ஞானப்பல்லின் உட்புறம் இருக்கும் உயிருள்ள செல்களில் இருந்து ஸ்டெம் செல்களை உருவாக்க இயலும் என்பதை ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்மூலம்ஸ்டெம் செல் வங்கிகள் உருவாக்கப்பட்டு, அவை ஜப்பானியர்களுக்கு ஒத்துப்போகிறதா என்றும் ஆராயப்பட்டது. ஏறக்குறைய 20 சதவீத ஜப்பானியர்களின் மரபியலுக்கு இந்த ஸ்டெம் செல்கள் ஒத்துப்போவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதால், இந்த ஆய்வு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
  
           யேல் பல்கலைகழக ஆய்வாளர்கள் முடிவளர தூண்டும் ஸ்டெம் செல்களை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த ஆதார செல் தோலின் கொழுப்பு அடுக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன்மூலம், முடியின் வேர்ப் பகுதியில்உள்ள ஸ்டெம் செல்களை தூண்டி வழுக்கை தலை உள்ளவர்களுக்கு வேர்க்கால்பகுதி உள்ள முடியைதூண்டி, சீக்கிரமாக வளர வைத்து தலை முழுவதும் பரவி விடும்.

            ஸ்டெம் செல்களை வைத்து, எலும்பு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளுக்கு தற்போது செயற்கையாக தயாரிக்கப்பட்ட எலும்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதற்க்கான பரிசோதனையில் இஸ்ரேல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த வரிசையில் மேலும் ஒரு மைல்கல் தான், ஸ்டெம் செல்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ள, இயற்கையான இதயத்தைப் போலவே துடிக்கும் திறனுள்ள இதய தசைகள். வருடா வருடம் லட்சக் கணக்கான உயிர்களை பலிகொண்டு வரும் இதய நோய்களுக்கு ஸ்டெம் செல்கள் மூலம் தீர்வு உண்டு என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர் .

            இந்த பிரத்தியேகமான இதய தசை உயிரணுக்களின் துடிக்கும் வேகம், ஓய்வாக உள்ள மனிதர்களின் இதய துடிப்பின் வேகத்தை ஒத்து இருக்கிறது. அதாவது, ஒரு நிமிடத்துக்கு 60 துடிப்புகள்.
இதயத்தின் ரத்தத்தை வெளியேற்றும் திறனை பாதிக்கும் குறைபாடான `அரித்மியாநோயிற்கு தீர்வு கிடைக்கவே இந்த ஸ்டெம் செல் ஆய்வு, மேற்கொள்ளபட்டுள்ளது.

           இது மட்டும் இல்லாமல், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்தும் ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த செல்கள் அதற்கென உள்ள வங்கிகளில் 0 டிகிரிக்கும் குறைவான தட்ப வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.
 
           சம்பந்தப்பட்ட நபருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படும்போது, இந்த ஸ்டெம்செல்கள் மூலம் குணப்படுத்தி வருகின்றனர்.  இந்த நிலையின் தற்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களையும் ஸ்டெம்செல்கள் குணப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள பிரிஷ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது பற்றிய ஆய்வை மேற் கொண்டனர்.

           “ஸ்டெம்செல்களை இதய நோயாளியின் உடலில் செலுத்திய ஒரு நாளில் அவை ரத்தக்குழாயில் உள்ள கோளாறுகளை சரி செய்து குணப்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது, மேலும், இதய நோயாளிகளின் ஸ்டெம் செல்களை எடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கிறது. 

            இவ்வாறு, நோயுற்ற உடல்செல்களை அகற்றிவிட்டு புதிய செல்களை மனித உடலில் உருவாக்கும் முயற்சியே ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். ஸ்டெம் செல்கள் வழியாக அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணமுடியும் என்று கூறுவதற்கு இயலாது. அதே நேரத்தில் இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் பல குறிப்பிடத்தக்க நோய்களை ஸ்டெம் செல்கள் மூலம் தீர்க்க இயலும் என்று அறிவியல் ஆய்வாளர் கூறுகின்றன.

          சகோ சிந்துமதி நிகழ்ச்சி தயாரிப்பாளர்-சத்தியம்தொலைக்காட்சி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்