வார்த்தைகள்

வார்த்தைகள் அற்புதமானவை, அழகானவை, ஆக்ரோஷமானவை, எளிமையானவை, இன்னும் என்னென்னவோ இப்படி வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருக்கலாம் நாம். ஏனெனில் வார்த்தைகள் வலிமையானவை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வார்த்தைகள் தான் எல்லாவற்றையும் செய்கின்றன. வார்த்தையின் ஜீவனை பொறுத்து அதன் அழகியலும், தேய்மானங்களும் அமைகின்றன. பகலிரவு ஆட்டங்களைப் போல வார்த்தைகள் மாறி மாறி பிறந்து கொண்டேயிருக்கின்றன அதன் இயல்பில். பிறப்பில் இருந்து இறப்பு வரை வார்த்தைகள் மனிதனை சுற்றியே பயணிக்கின்றன. மனிதர்கள் த ான் வார்த்தைகளை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறார்கள் போலும். பல நேரங்களில் வார்த்தைகள் குறித்து யோசித்திருக்கிறேன். யாருக்கும் துரோகம் இழைத்தவனில்லையே நான் என எனக்குள்ளாகவே யோசித்திருக்கிறேன். ஆனால், வார்த்தைகள் என்னை சுற்றி வந்தவன்னமே இருக்கின்றன. கால இடைவெளியில் சில வார்த்தைகள் மறைந்து போகின்றன. சில மறக்கப்படுகின்றன. ஆனாலும், வார்த்தைகள் ஆகாய நிலவைப் போல.., மீண்டும் மீண்டும் எழுந்து பயணித்துக்கொண்டேயிருக்கின்றன. காற்றெங்கும் வியாபித்திருக்கும் வார்த்தைகளால் நெட்வொர்க் ஜாம் ஆகுமோ என்றொ...