சிலந்திக்காரன்

நம்முடைய இலக்குகள் விரிவடைந்துக்கொண்டேயிருக்கின்றன. நம்முடைய பயணத்தின் தூரம் அதிகரித்தபடியே போகின்றன. நம்முடைய பார்வைகள் விசாலமாகிக் கொண்டிருக்கின்றன. ஒன்றைத்தவிர,.. நம்முடைய மக்களைத் தவிர! அவர்கள் உண்மைக்கு புறம்பானவர்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பொய்களுக்கு வண்ணம் தீட்டுபவனையெல்லாம் தலைவனாய் கருதிக்கொண்டிருக்கிறார்கள். யாரை நம்பி தங்களின் மதிப்புமிக்க வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறார்களோ...அவர்கள்தான் இவர்களுக்கெதிரான வேலைகளை இலவசமாய் செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மை தெரியாமலிருக்கிறார்கள். யார் தூக்கிவைத்து கொண்டாடப்படுகிறார்களோ... யாரை எல்லோரும் நம்பி தொலைக்கிறார்களோ... அவர்கள்தான் அத்தனை மக்களுக்குமான படுகுழிகளை அழகுபார்த்து வெட்டுகிறார்கள்”. அதனால்தான் சொல்ல வேண்டியிருக்கிறது....இங்கு நிம்மதியாக உறங்குவதற்கு இப்போதெல்லாம் இரவுகள் கிடைப்பதேயில்லை. தவறான வழிகாட்டுதல்களை திணித்துக்கொண்டிருக்கும் சில மனிதர்களிடம் இருந்து நம் மக்களுக்கு எப்படி புரியவைப்பது என்கிற கேள்வி நம் தலையை குடைந்து கொண்டிருக்கிறது. எதுவும் அறியாத அப்பாவி முகங்கள் சிலந்திகளின் ...