இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்து?

படம்
எழுத்து ஒரு கலை . அது நம்மையே சில நேரங்களில் நமக்கு அடையாளம் காட்டிவிட்டுப் போகிறது. பல நேரங்களில் எதாகிலும் ஒரு பயணம் தான் நம்மை எழுத தூண்டுகிறது. அத்தகைய பயணம் நம்மை இன்பத்தில் மிதக்க விட்டிருக்கலாம்...இதயத்தை கிழித்து சோகத்தை பரப்பியிருக்கலாம்...எப்படி வேண்டுமானாலும் அந்த நிகழ்வு நம்மோடு கலந்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம் எழுத்தாக்க வேண்டுமென்கிற எண்ணம்தான் நம்மை மனிதனாகவே வைத்திருக்கிறது. அதையெல்லாம் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்கிற சிந்தனைதான் நம்மை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. உலகில் பலர் அர்த்தமில்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  ஏன் எழுதுகிறோம் என்றே தெரியாமலும், தன்னை ஒரு தீவிர எழுத்தாளனாக, எழுத்தின் மீது பற்று கொண்ட காதலனாக, மக்களின் முன்னாள் தன்னை ஒரு எழுத்துச்  சிற்ப்பியாக உருவகம் செய்து வைக்க பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். எழுத்துக்களை உருவாக்கிய முதல் தலைமுறை மனிதர்கள் போல சிலர் ஏனோ தம்மை மற்றவர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், இத்தனை புழுதிகளையும் தாண்டி,.. எழுதுவதை உண்மையாகவே நேசிக்கவும், எழுதுவதை ஒரு தவமாக ...