இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாப்ள எப்ப கல்யாணம்?

படம்
என்னுடைய நண்பர்கள் என்னிடம் கேட்க்கிற கேள்விகளில் இப்போதெல்லாம் பெரும்பாலும் திருமணம் பற்றியதும் இருக்கிறது. மாப்ள எப்ப கல்யாணம்? ஏன்டா,.. நாங்கல்லாம் பண்ணியாச்சு, நீ இன்னும் செஞ்சுக்காம இருக்கியேடா? என்று என்னை கேட்டு வைப்பார்கள். எனக்கு இந்த கேள்வியை மட்டும் எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் குழம்புவேன். அந்த சமயத்தில் என்னைவிட வயதில் மூத்தவர்கலெல்லாம் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதுபற்றி நினைப்பேன். பெண் பிள்ளையாயிருந்தால் பரவாயில்லை. இன்னும் அடுத்தடுத்த பிள்ளைகள் இருப்பதால் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும். அல்லது குடும்ப சூழல் பொருட்டு திருமணம் நடந்தேறும். ஆனால், அது அல்லவே எனக்கு. இருந்தாலும் வாய் நடுக்கம் காட்டாது பதிலுரைக்கும் அவர்களுக்கு. பாக்கலாம் இப்ப என்ன அவசரம் என்று? திருமணம் என்ற வார்த்தையை எடுத்ததும் எனக்கு நண்பன் முரளிதான் உடனே ஞாபகத்துக்கு வந்தான். அவனை உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு அறிமுகம் செய்வதென்றால் இந்த பக்கம் முழுவதும் நீங்கள் படிக்கவேண்டிவரும். முடிந்தால் படித்த...

இரவுகள் அழகுதான்

படம்
வரப்பின் ஓரங்களில் பொருக்கியெடுத்த முட்கள் குத்தி, கிழிந்தொழுகும் செந்நிற விரல்களுக்கும், வயல்களின் வெடுப்புகளில் கானல் நீரலைந்து வெந்து போன பாதங்களுக்கும் வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்தரைத்து பற்று போட்டநிம்மதியில்... எம் மக்கள் உறங்கி கழிக்கும் இரவுகளில் கைகள் பேனாவை பிடித்துகொண்டு எதாகிலும் எழுதி தீர்க்க என்னை பணிக்கும். மனம் வேறொரு உலகில் வேறொரு நிலையில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலும் எங்கிருந்தோ திரும்பிய மேகத்தின் ஈரத்துளிகள் பட்டு எதையாகிலும் எழுத ஆரம்பிக்கும் விரல்கள். தூரத்து உறவுகளெல்லாம் வந்திருந்து மகிழ்ந்த ஒரு தருணத்தில், எப்போதோ ஒருமுறை பார்த்துவைத்த திரைப்படத்தில் எவனோ ஒரு மகாநடிகன் காதலித்து எனக்கும் காதலை பற்றி சொல்லியிருந்தான். என்னையும் கவிதைகள் எழுத தூண்டியிருந்தன். அவன் சொல்லிவிட்டு போன வார்த்தைகள் எனக்குள்ளும் முளைத்திருந்தன காதல் காதலாய்... முரட்டு பாவிகளோடு நாயகன் மோதும் காட்சியில் ரத்த சொட்டுகளை கண்டால் கண்ணீர் வடித்தபடி தேம்பியழும் நெஞ்சம், காதல் பாடல்களை கண்கொத்தி பாம்பாய் கவனித்தது எனக்கு. அழுதுவடித்த கன்னம் அறுந்து கிடக்கும் சட்டை முனையால் கண்களை ...