சந்தோஷங்களை பறித்துக்கொள்ளும் கொண்டாட்டம் வேண்டாம் நண்பர்களே

தீபாவளி கொண்டாடுவதை விட ... அதன் பாதுகாப்பு இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஒரு புறம் பட்டாசு... மற்றொரு புறம் புத்தாடை களேபரங்கள். இரண்டும் செலவு செய்வதில் தான் முடிகிறது என்றாலும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி குழந்தைகளின் முகத்தை பாருங்கள் - அது அளவிட முடியாதது. ஆனால், பல நேரங்களில் கொண்டாட்டம் பொறுப்பற்றதாக கடந்துவிடுவதால் கொண்டாட்டம் பல கவலைகளை சந்திக்கும் சூழலை ஏற்படுத்தி விடுகிறது. ஒருபுறம் புத்தாடைகளோடு பட்டாசு வெடித்தபடி இருக்கும்...மற்றொரு புறத்தில் வெடித்து சிதறிய நெருப்பால் ஒரு வீடு எரிந்து கொண்டிருக்கும்... ஒருபுறம் கணவன், பிள்ளைகளுக்காக விடிய விடிய பலகாரம், சமையல் என தாயார் தவித்துக்கொண்டிருப்பார்... மற்றொரு புறம் குடித்துவிட்டு கொண்டாட்டத்தை கவலையாக்கி விட்டு எங்கேனும் ஒரு மரத்தடியிலோ, சாலையோரத்திலோ கணவன் படுத்திருப்பார். ஒருபுறம் தந்தை வீட்டுக்கு செல்வதற்காக மனைவி புத்தாடை அணிந்து காத்திருப்பார்... மற்றொரு புறம் யாரிடமோ கணவன் சண்டை நடத்தி ரத்தக்காயங்களோடு வீடு வந்து சேர்வான். எத்தனை வேறுபாடுகள் நிறைந்ததாயிருக்கிறது வாழ்க்கை. ஆசையாசையாய் குடும்பத்தோ...