இடுகைகள்

ஆகஸ்ட், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கட்டுடைக்கும் கபாலி

படம்
பா.ரஞ்சித் இயக்கத்துல தாணு தயாரிச்சு இந்தியாவின் மிகப்பெரிய வசூல் சாதனையை செஞ்சிருக்கிற படம் கபாலி. எப்போதும் ரஜினி சுற்றி இருக்கும் சர்ச்சை, இந்த படத்துல இயக்குனர சுத்தி வட்டமடிக்குது. கபாலி ஒரு தலித் படம் என்று. ஒரு தலித் படத்தை ஏன் ரஜினியை வைத்து எடுத்தார் என்று? இதை விட கீழ்த்தரமான விமர்சனங்களை இனி காணவேண்டிய அவசியமில்லை. ரஞ்சித் இயக்குனர் இயக்கினார்... ரஜினி நடிகர் நடித்திருக்கிறார்...  பார்க்க முடிந்தால், பிடித்தால் பார்க்கலாம்... இல்லையேல் அடுத்த வேலையை பார்த்திருக்கலாம்... முடியவில்லை போலும், எங்கேனும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம்... ஆம் அதைத்தானே பலருக்கு செய்திருக்கிறது கபாலி. கபாலியை பார்த்தால் எங்கும் சாதிக்கான அடையாளங்களை காண முடிவதில்லை.. கதையோ மலேசியாவில் நடக்கிறது. எப்போதும் முதலாளிக்கு பயந்தவர்களாகவும், அடிமைகளாகவும், நோயாளிகளாகவும் மட்டுமே படைக்கப்பட்ட கபாலிகள். சுதந்திரமானவர்களாக படைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதென்பது ஒன்றும் அதிசயமில்லை. எரிச்சலை வெளிப்படுத்த, எங்கே அதிகாரம் குறித்த பிரக்ஜை மக்களுக்கு ஏற்பட்டு விடுமோ என எண்ணுவதில் ஆச்ச...