வெறிகொண்டெழுந்திருக்கும் வாழ்க்கை

இரவுகளை உடைத்து பகல் செய்வதாயில்லை... இரவும் அழகு பகலும் அழகு என்பதாய்... பொய்மை உதறி உண்மை செய்வதாயில்லை... சமயத்தில் பொய்மையும் அழகு உண்மையும் அழகு என்பதாய்... வெறிகொண்டெழுந்திருக்கும் வாழ்க்கை... சில நேரங்களில் மட்டும் சில நேரங்களில் மட்டும் தான் விடிந்த பின்பும் எரியும் விளக்குபோல...